செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியை எதிர்த்து திமுக வழக்கு

Published On 2019-07-06 09:41 GMT   |   Update On 2019-07-06 09:41 GMT
சமீபத்தில் நடந்த சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை:

சமீபத்தில் நடந்த சாத்தூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் 456 வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அ.தி.மு.க. வேட்பாளர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அதிகாரிகள் அவருக்கு ஆதரவாக செயல்பட்டனர். தேர்தலில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளது. அதே போல் வாக்கு எண்ணிக்கையும் சரிவர நடைபெறவில்லை.

எனவே ராஜவர்மன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறி உள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

Similar News