செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தண்ணீர் பஞ்சம் கண்டித்து போராட்டம் நடத்த ஐகோர்ட்டு அனுமதி

Published On 2019-06-28 11:04 GMT   |   Update On 2019-06-28 12:21 GMT
தண்ணீர் பஞ்சம் காரணமாக தமிழக அரசை கண்டித்து அறப்போர் இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

வரும் 30-ந்தேதி தண்ணீர் பஞ்சம் காரணமாக தமிழக அரசை கண்டித்து அறப்போர் இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்காத தமிழகரசை கண்டித்து போராட்டம் நடத்த அறப்போர் இயக்கத்துக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சியினருக்கும் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதை எதிர்த்து இரு அமைப்புகளும் ஐகோர்ட்டில் வழக்குகளை தனித்தனியாக தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,

அறப்போர் இயக்கம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தலாம் என்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் உண்ணாவிரதம் மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணிவரை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News