செய்திகள்

கல்லூரி மாணவர்கள் மீண்டும் பஸ் தின கொண்டாட்டம் - 9 பேர் சஸ்பெண்டு

Published On 2019-06-27 08:14 GMT   |   Update On 2019-06-27 08:14 GMT
பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 9 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

சென்னையில் கடந்த வாரம் விடுமுறை முடிந்து கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டபோது கல்லூரி மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பஸ்சின் கூரை மீது ஏரி ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் திடீரென டிரைவர் பிரேக் போட்டதால் கீழே விழுந்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கினர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை மாணவர்கள் மீண்டும் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தமல்லி அருகே அண்ணா சதுக்கம் வந்த 25ஜி பஸ்சில் பயணம் செய்த புதுக்கல்லூரி மாணவர்கள் பஸ்சில் ஆடி பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சாலை போலீசார் விரைந்து சொன்று மாணவர்களை மடக்கி பிடித்தனர்.

இது தொடர்பாக அஷ்ரப் அலி, பயாஸ், முகமது பர்கான், முகமது ஆருண், அப்துல் ரஹ்மான், அஸ்லாம், முகமது பகிம், முகமது முபாரக், சையத் அன்வர் ஆகிய 9 பேர் போலீசில் சிக்கினர்.

அவர்களிடம் அண்ணா சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே பஸ்சில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்ட 9 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் பஸ் தின கொண்டாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் மாணவர்களின் பஸ் தின கொண்டாட்டம் தொடர்கிறது.

இதனை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.


Tags:    

Similar News