செய்திகள்

சென்னைக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை - துரைமுருகன் மறுப்பு

Published On 2019-06-22 15:06 GMT   |   Update On 2019-06-22 15:06 GMT
குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரித்ததாக வெளியான செய்திக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும்  என திமுக பொருளாளர் துரைமுருகன், அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகின.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகத்தில் இருந்து கொண்டு தண்ணீர் தர மறுத்தால், கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும்? என திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரித்ததாக வெளியான செய்திக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News