செய்திகள்

திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

Published On 2019-06-19 12:05 GMT   |   Update On 2019-06-19 12:05 GMT
புயல் நிவாரணம் வழங்காமல் முறைகேடு செய்த அதிகாரிகளை கண்டித்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

திருத்துறைப்பூண்டி:

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் கோர தாண்டவமாடியது. இதனால் தென்னை விவசாயிகள், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கிராமப் புறங்களில் மக்கள் குடிசை வீடுகளை இழந்தனர். மேலும் தென்னை மரங்கள் சாய்ந்ததில் வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகள் வேதனை அடைந்தனர். மீனவர்களும் புயலில் சிக்கி படகுகள் சேதமானதால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாநில அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் முத்துப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்காமல் அதிகாரிகள் முறைகேடு செய்து விட்டதாக புகார்கள் எழுந்தது.

இதனால் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர் நீஜாம் என்பவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தில் கேட்டப்போது அணைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் முறையாக அரசிடம் அங்கீகாரம் செய்யப்பட்ட மீனவர்களுக்கு 150-க்கும் மேற்ப்பட்டோருக்கு நிவாரணத்தை அதிகாரிகள் கையாடல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்காத அதிகாரிகளை கண்டித்து திருத்துறைப் பூண்டி தாசில்தார் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது 

Tags:    

Similar News