செய்திகள்

ராமநாதபுரம் அருகே சட்டக்கல்லூரி கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்- அமைச்சர் தகவல்

Published On 2019-06-09 13:08 GMT   |   Update On 2019-06-09 13:08 GMT
ராமநாதபுரம் அருகே ரூ.66 கோடி செலவில் அரசு சட்டக்கல்லூரிக்கான கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.

ராமநாதபுரம்:

அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க போலீஸ் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மணல் திருட்டில் ஈடுபடும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும்.

ராமநாதபுரம் அருகே ரூ.66 கோடி செலவில் அரசு சட்டக்கல்லூரிக்கான கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். அதற்கான ஆயத்த பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

ராமேசுவரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் அரசு கலைக்கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும். தேர்தல் நடைமுறையால் கல்லூரி அமைக்கும் பணி சற்று தாமதமானது. நடப்பாண்டில் கல்லூரி செயல்படும். இதில் எவ்வித மாற்றமும் கிடையாது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாயல்குடி அருகே குதிரைமொழி என்ற இடத்தில் ரூ.600 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். ராம நாதபுரம் மாவட்டம் முழுவதும் குடிநீர் கிணறு கள், ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோ சனையின்படி மாவட்ட மக்களுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News