செய்திகள்

வியாபாரியிடம் பணம் பறிப்பு: திருவல்லிக்கேணி சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் சஸ்பெண்டு

Published On 2019-05-30 10:24 GMT   |   Update On 2019-05-30 10:24 GMT
வியாபாரியிடம் பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் திருவல்லிக்கேணி சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசாரை சஸ்பெண்டு செய்து கிழக்கு மண்டல இணை கமி‌ஷனர் ஜெயகவுரி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

திருவல்லிக்கேணியில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்து வருபவர் சாகுல் அமீது.

இவரை மிரட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், தலைமை காவலர் அனந்த ராஜ், அசோக்குமார், சன்னி லாய்டு ஆகியோர் ரூ.80 ஆயிரம் பறித்ததாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மீதான புகார் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் பணம் பறித்தது ஊர்ஜிதமானது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், தலைமை காவலர் ஆனந்த ராஜ், அசோக்குமார், சன்னிலாய்டு ஆகிய 4 பேரையும் சஸ்பெண்டு செய்து கிழக்கு மண்டல இணை கமி‌ஷனர் ஜெயகவுரி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News