செய்திகள்

மாதவரம் அருகே அம்மன் சிலை கடத்தப்பட்டதாக சுவரொட்டி- வாலிபர் கைது

Published On 2019-05-12 12:16 GMT   |   Update On 2019-05-12 12:16 GMT
மாதவரம் அருகே அம்மன் சிலை கடத்தப்பட்டதாக கூறி போஸ்டர் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாதவரம்:

மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள பெரியசேக்காடு பகுதியில் எல்லை காத்த மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டிய போது 1 அடி கொண்ட வெண்கல அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த அம்மன் சிலை பற்றி அப்போதிருந்த போலீசார் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி பின்னர் வருவாய் துறையிடனரிடம் சிலையை ஒப்படைத்தனர். தற்போது அந்த சிலை தொல் பொருள் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் மீட்கப்பட்ட அம்மன் சிலை கடத்தப்பட்டு விட்டதாகவும் இதற்கு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டி மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் போன்ற பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வார்டு முன்னாள் கவுன்சிலர் மனோகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மாதவரம் பால்பண்ணை போலீ நிலையத்தை முற்றுகையிட்டனர். அவதூறு சுவரொட்டி ஒட்டிய மதிவாணன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மாதவரம் உதவி கமி‌ஷனர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதானம் பேசி கலைந்து போக செய்தனர்.

இதையடுத்து போலீஸ் மீதும் கோவில் நிர்வாகத்தின் மீதும் பொய்யான அவதூறு பரப்பியதாக வழக்குபதிவு செய்து மதிவாணனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News