செய்திகள்

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Published On 2019-05-10 03:11 GMT   |   Update On 2019-05-10 03:11 GMT
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மேலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது. #ChennaiMeteorologicalDepartment
சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. அந்த வகையில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி திருச்சி மாவட்டம் வாலாடியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், முகையூரில் 8 செ.மீ., பாடலூரில் 6 செ.மீ., நன்தியாரில் 5 செ.மீ., முசிறி மற்றும் விழுப்புரத்தில் 4 செ.மீ., சத்தியமங்கலம், அரூர், சமயபுரம், பூண்டி, செட்டிக்குளம், வென்பவூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., துறையூர், வந்தவாசி, தாமம்பட்டி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., திருச்சி, உளுந்தூர்பேட்டை, பவானி, உத்திரமேரூர், கொல்லி மலை, லால்குடி, மதுராந்தகம், பாப்பிரெட்டிப்பட்டி, புல்லம்பாடி, ஊத்தங்கரை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

இந்த நிலையில் மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது. #ChennaiMeteorologicalDepartment

Tags:    

Similar News