செய்திகள்

இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published On 2019-04-21 10:21 GMT   |   Update On 2019-04-21 10:21 GMT
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #Lankablasts #MKStalin
சென்னை:

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று அடுத்தடுத்து நிகழ்ந்த 8 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 185 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் சுமார் 500 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இன்றைய குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இலங்கையில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது. இதன் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். #Lankablasts #MKStalin
Tags:    

Similar News