search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு"

    • இச்சம்பவத்தில் 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டனர்
    • அந்த சந்திப்பின் போது நான் அங்கு இல்லை என ஆசாத் மவுலானா கூறினார்

    இலங்கையில் 2019 ஏப்ரல் 21 காலை ஈஸ்டர் விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அன்று, 3 கிறித்துவ தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. சில மணி நேரங்கள் கழித்து அதே நாளில் டெமடகோடா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிலும், டெஹிவாலா பகுதியில் ஒரு விருந்தினர் விடுதியிலும் மீண்டும் குண்டுகள் வெடித்தன.

    இந்த சம்பவத்தில் 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டதாகவும், 500 பேருக்கும் மேல் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஆசாத் மவுலானா என்பவர் சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார்.

    அதில், "அவ்வருடம் நடக்க இருந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி பெறுவதற்காக இலங்கையில் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்த ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புள்ள இலங்கையை சேர்ந்த கும்பலுக்கு, அந்நாட்டின் உளவுத்துறையில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவரோடு சந்திப்பை ஏற்பாடு செய்தேன். அந்த சந்திப்பின் போது நான் இல்லை. ஆனால், சந்திப்பிற்கு பிறகு அந்த அதிகாரி, 'தேச பாதுகாப்பின்மை மட்டுமே ராஜபக்ஷேவின் குடும்பம் ஆட்சியில் அமர ஒரே வழி' என என்னிடம் கூறினார்," என்று அவர் தெரிவித்தார்.

    இந்த பேட்டி இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதில் குறிப்பிடப்படும் உயர் அதிகாரி யார் என்றும் அவருக்கு குண்டு வெடிப்பில் சம்பந்தம் உள்ளதா என்பதை விசாரிக்கவும் ஒரு பாராளுமன்ற கமிட்டி அமைக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. விசாரணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என இலங்கையின் தொழிலாளர் துறை அமைச்சர் மனுஷ நானயக்கரா தெரிவித்தார்.

    ஈஸ்டர் தாக்குதலை தொடந்து இஸ்லாமிய மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம் என இலங்கை மக்களுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார். #SriLankanBalasts #Maithripalasirisena
    கொழும்பு:

    இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்புவில் 3 கிறிஸ்தவ தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதேப்போல் 3 நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகம் ஆகியவற்றை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதல்களுக்கு தேசிய தவுகித் ஜமாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து சுமார் 75 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



    மேலும் தற்கொலைப்படை தாக்குதல்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 நபர்களின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு,  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் இலங்கையின் பல பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் மீது மாற்று மதத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி அங்குள்ள சிறுபான்மை இனத்தவரிடையே நிலவுகிறது.

    இந்நிலையில்,  இஸ்லாமிய மக்கள் அனைவரையும்  தீவிரவாதிகள் போல் பார்க்க வேண்டாம் என அதிபர் மைத்ரேயபால சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'எங்கள் மண்ணில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்தும் திறன் அரசுக்கு உண்டு' என குறிப்பிட்டார்.

    மேலும் இலங்கையில்  சிறுபான்மை இனத்தவராக வாழும்  முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகள் போல் பார்க்காமல், அவர்களை  பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். #SriLankanBalasts #Maithripalasirisena 

    இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, சென்னை ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். #SrilankanBlasts #ChennaiRailway
    சென்னை:

    இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்  5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். மேலும் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர்களுள் 2 பெண்கள் உட்பட 9 பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து கொழும்புவில் பல்வேறு முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டன. மேலும் இலங்கையில் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டுகள் இருக்கக்கூடும் என்ற அடிப்படையில், அந்நாட்டு ராணுவம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது.



    இந்நிலையில் இலங்கையின் அண்டை நாடான இந்தியாவிலும் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரெயில்வே போலீசார் இன்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளின் உடைமைகள் அனைத்தும்  சோதனை செய்யப்படுகின்றன.  #SrilankanBlasts #ChennaiRailway    
    இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட 9 தற்கொலை பயங்கரவாதிகளுள் ஒருவர் பெண் என இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி ருவான் விஜயவர்தனே கூறியுள்ளார். #SrilankanBlasts #WomanSuicideBomber
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில்  தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் 359 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

    தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது எனவும், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். எனவே, இலங்கையில் வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.



    இந்நிலையில் இன்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது.  இது குறித்து இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி ருவான் விஜயவர்த்தனே கூறியதாவது:

    தலைநகர் கொழும்புவில் உள்ள சவாய் திரையரங்கு அருகே மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு கண்டறியப்பட்டது.  இதனை நிபுணர்கள் அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர்.  இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாத கும்பல் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.

    இதில் ஒரு குழுவின் தலைவர் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.  இன்னும் 2 நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து உறுதி செய்யப்படும். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட 9 தற்கொலை பயங்கரவாதிகளுள் ஒருவர் பெண் என தெரிய வந்துள்ளது. இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #SrilankanBlasts #WomanSuicideBomber

    இலங்கையின் தலைநகரான கொழும்புவில் இன்று காலை மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி ருவான் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார். #BombFoundinSrilanka #RuwanWijewardene
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில்  தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் நேற்று மாலை நிலவரப்படி, 321 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்பின்னர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 359 ஆக உயர்ந்துள்ளது. இதில் 45 பேர் குழந்தைகள் ஆவர்.



    ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். எனவே, வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி ருவான் விஜயவர்த்தனே கூறுகையில், ‘தலைநகர் கொழும்புவில் உள்ள சவாய் திரையரங்கு அருகே மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு கண்டறியப்பட்டது.  இதனை நிபுணர்கள் அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர்.  

    இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாத கும்பல் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குழுவின் தலைவர் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.  இன்னும் 2 நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து உறுதி செய்யப்படும்’ என கூறினார்.  #BombFoundinSrilanka #RuwanGunasekara 
    குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு தெருக்களில் நடக்கவே பயமாக உள்ளது என்று இலங்கை கிரிக்கெட் வீரரான தசுன் ஷனகா கவலையுடன் தெரிவித்துள்ளார். #SrilankaBlasts #EasterBlasts
    இலங்கையில் ஈஸ்டர் அன்று தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. நீர்கொழும்பு பகுதியில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது. இந்த தேவாலயம் அருகில்தான் இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் ஷனாகா வீடு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இவரும் பிராத்தனைக்கு சென்றிருப்பார். ஆனால், சனிக்கிழமை முழுவதும் வெளியே சென்றிருந்ததால் அவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு பிரார்த்தனைக்கு செல்லவில்லை.

    அதனால் உயிரோடு உள்ளேன் என ஷனகா தெரிவித்துள்ளார். கொடூர சம்பவம் குறித்து ஷனாகா கூறுகையில் ‘‘வழக்கமாக நான் சர்ச்சுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், நான் முந்தைய நாள் வெளியில் சென்றிருந்ததால் மிகவும் சோர்வாக இருந்தேன். அதனால் செல்லவில்லை.

    ஞாயிற்றுக்கிழமை காலையில் நான் வீட்டில் இருந்தபோது, வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரம் கழித்து மக்கள் தேவாலயத்தில் குண்டு வெடித்ததாக கூறினார்கள். நான் சம்பவ இடத்திற்கு விரைந்தேன். அப்போது கண்ணால் கண்ட சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.



    தேவாலயம் முழுவதும் சிதைந்து காணப்பட்டது. உயிரிழந்தவர்களை மக்கள் வெளியே இழுத்துக் கொண்டு வந்தார்கள். அந்த சம்பவத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், தேவாயலத்திற்குள் இருந்தவர்கள் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க மாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால், குண்டு வெடிப்பு விபத்தால் சிதறிய சிறு துகளால் அருகில் உள்ளவர்கள் கூட காயம் அடைந்துள்ளனர்.

    எனது அம்மாவும், பாட்டியும் தேவாலயம் சென்றிருந்தார்கள். ஆனால் இருவரும் உயிர் பிழைத்துவிட்டனர். ஆனால், எனது பாட்டியின் தலையில் கல் ஒன்ற பலமாக தாக்கியதால் ஆபரேசன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் இனவாத பிரச்சனை ஏதும் கிடையாது. ஆனால் இந்த சம்பவம் பாதுகாப்பு குறித்து யோசிக்க வைத்துள்ளது. தெருக்களில் நடக்கவே பயமாக உள்ளது’’ என்றார்.
    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. #Indianskilled #SriLankarblasts
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.



    இந்தியாவை சேர்ந்த லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த திங்கள் அன்று தெரிவித்திருந்தார்.

    இலங்கை குண்டுவெடிப்புகளில் 5 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் வேமுராய் துளசிராம், எஸ்.ஆர். நாகராஜ், கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா, எச். சிவக்குமார் என்றும் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று தெரிவித்தது.

    இந்நிலையில், மேலும் ஹெச்.மாரிகவுடா, ஹெச்.புட்டராஜா ஆகிய 2 இந்தியர்கள் பலியானதாக இன்று காலை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  #Indianskilled #SriLankarblasts
    இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு குழந்தைகள் கலந்துக் கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. #SrilankanBlast #PrayerPictures
    கொழும்பு:

    இயேசு கிறிஸ்து  சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள்  உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் மாபெரும் திருவிழா 'ஈஸ்டர் பண்டிகை' ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது.

    இந்த விழா ஆண்டுதோறும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில்,  புனித வெள்ளியில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

    உலகில் உள்ள அனைத்து கிறிஸ்துவ மக்களும் பண்டிகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, கடந்த ஞாயிறு அன்று  அனைத்து தேவாலயங்களிலும் கொண்டாட்டங்கள், பிரார்த்தனை கூட்டங்கள்,  குழந்தைகளின் இனிய குரலில் இயேசு கிறிஸ்து குறித்த பாடல்கள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்த ஈஸ்டர் பெருநாளில் உலகையே உலுக்கிய சம்பவம் அரங்கேறியது. இலங்கையில் 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு நாட்டையே மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. இதில் 310 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    இந்நிலையில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக குழந்தைகளின் ஆடல் பாடல் கொண்டாட்டங்கள், மக்களின் பிரார்த்தனை கூட்டங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் குழந்தைகளின் சிரிப்பு அலை, மக்களின் ஆத்மார்த்தமான பிரார்த்தனை இடம்பெற்றுள்ளன.

    குழந்தைகள் நிகழ்ச்சி முடிந்தவுடன் தேவாலயத்திற்கு வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். உள்ளே தேவாலயத்தில் பிரார்த்தனைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன் பின்னர் சில நிமிடங்களில் குண்டு வெடித்தது. இதில் விளையாடிக் கொண்டிருந்த 14 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    குழந்தைகளின் கொண்டாட்டம் சில நிமிடங்களில் குண்டு வெடிப்பில் மறைந்த சம்பவம், மனதை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  #SrilankanBlast #PrayerPictures






    இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எத்தகைய உதவியும் செய்ய தயாராக இருப்பதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது. #SriLankablasts #InterPol
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதுவரை யாரும் பொறுப்பேற்காத இந்த தாக்குதல்களில் 5 இந்தியர்கள் உள்பட 290 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    இந்த கொடூர தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் 24 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. என்.கே.இலங்கக்கூன், சட்டம் ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோரை கொண்ட சிறப்பு குழுவை  அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார்.

    இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவ இன்டர்போல் முன்வந்துள்ளது. இதுதொடர்பாக இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜுர்கென் ஸ்டாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் நண்பர்கள், குடும்பங்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

    கொடூரமான இந்த தாக்குதல் சம்பவத்தினை சர்வதேச போலீசார் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். தேசிய அளவில் அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். #SriLankablasts #InterPol
    இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் கர்நாடகா மாநிலத்தின் ஜேடிஎஸ் கட்சியினர் 2 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் மாயமாகியுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. #HDKumaraswamy #SrilankanBlasts
    பெங்களூரு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.

    இந்நிலையில் இன்று சுஷ்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை குண்டுவெடிப்புகளில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த சம்பவத்தில் இதுவரை 5 இந்தியர்கள் பலியாகியுள்ளனர் எனவும் கூறினார்.



    இது குறித்து கர்நாடகா முதல் மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தளம்(ஜேடிஎஸ்) கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி கூறியதாவது:

    கொழும்புவிற்கு சுற்றுலா மேற்கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்த 7 தொண்டர்கள், நேற்று நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு  சம்பவத்திற்கு பின்னர்  மாயமானதாக தகவல் கிடைத்தது. இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.

    அவர்கள் குறித்த தகவல் அறிய இந்திய தூதருடன் தொடர்பில் இருந்தேன். இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், உயிரிழந்த 5 இந்தியர்களுள் 2 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என அறிவித்திருந்தார். இதைக் கேட்டு மிகவும் வருந்தினேன்.

    இந்த தாக்குதலில் மறைந்த கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா ஆகிய இருவரும் எனக்கு நெருக்கமான தொண்டர்கள் ஆவர். இருவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தாருடன் என்றும் நான் துணை நிற்பேன்.  

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து இலங்கை வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. #HDKumaraswamy #SrilankanBlasts

    இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக 24 பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். #SriLankablast #Colomboblast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த கோர  தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.  மேலும் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.



    இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு முகமைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 24  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார். அவர்களை கைது செய்த போலீசார், தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள், கடந்த 3 மாதங்களாக தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் கொழும்புவின்  கட்டுநாயக்க விமான நிலையம் அருகே இன்று காலை போலீசார் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட போலீசார் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு செயலிழக்கச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   #SriLankablast #Colomboblast
    இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயமுற்றனர். #SriLankablasts #Colomboblasts
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.



    இந்த கோர  தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.

    இதில் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக இலங்கையில் உள்ள நேஷனல் மருத்துவமனை தெரிவித்தது. இதனை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். தற்போது 5 இந்தியர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SriLankablasts #Colomboblasts  

    ×