search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    2019 நாச வேலையில் உளவுத்துறை அதிகாரிக்கு தொடர்பு?.. விசாரணைக்கு உத்தரவிட்ட இலங்கை
    X

    2019 நாச வேலையில் உளவுத்துறை அதிகாரிக்கு தொடர்பு?.. விசாரணைக்கு உத்தரவிட்ட இலங்கை

    • இச்சம்பவத்தில் 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டனர்
    • அந்த சந்திப்பின் போது நான் அங்கு இல்லை என ஆசாத் மவுலானா கூறினார்

    இலங்கையில் 2019 ஏப்ரல் 21 காலை ஈஸ்டர் விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அன்று, 3 கிறித்துவ தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. சில மணி நேரங்கள் கழித்து அதே நாளில் டெமடகோடா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிலும், டெஹிவாலா பகுதியில் ஒரு விருந்தினர் விடுதியிலும் மீண்டும் குண்டுகள் வெடித்தன.

    இந்த சம்பவத்தில் 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டதாகவும், 500 பேருக்கும் மேல் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஆசாத் மவுலானா என்பவர் சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார்.

    அதில், "அவ்வருடம் நடக்க இருந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி பெறுவதற்காக இலங்கையில் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்த ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புள்ள இலங்கையை சேர்ந்த கும்பலுக்கு, அந்நாட்டின் உளவுத்துறையில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவரோடு சந்திப்பை ஏற்பாடு செய்தேன். அந்த சந்திப்பின் போது நான் இல்லை. ஆனால், சந்திப்பிற்கு பிறகு அந்த அதிகாரி, 'தேச பாதுகாப்பின்மை மட்டுமே ராஜபக்ஷேவின் குடும்பம் ஆட்சியில் அமர ஒரே வழி' என என்னிடம் கூறினார்," என்று அவர் தெரிவித்தார்.

    இந்த பேட்டி இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதில் குறிப்பிடப்படும் உயர் அதிகாரி யார் என்றும் அவருக்கு குண்டு வெடிப்பில் சம்பந்தம் உள்ளதா என்பதை விசாரிக்கவும் ஒரு பாராளுமன்ற கமிட்டி அமைக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. விசாரணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என இலங்கையின் தொழிலாளர் துறை அமைச்சர் மனுஷ நானயக்கரா தெரிவித்தார்.

    Next Story
    ×