செய்திகள்

தேனி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.54 சதவீதம் தேர்ச்சி

Published On 2019-04-19 11:12 GMT   |   Update On 2019-04-19 11:12 GMT
தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 92.54 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். #Plus2Results
தேனி:

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 136 பள்ளிகள் உள்ளது. 53 அரசு பள்ளிகளும், 83 அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளும் அடங்கும். நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் தேனி மாவட்டத்தில் 92.54 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வில் தேனி மாவட்டத்தில் 7,488 மாணவர்களும், 7,617 மாணவிகளும் என மொத்தம் 15,105 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 6,809 மாணவர்களும், 7,169 மாணவிகளும் என மொத்தம் 13,978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.54 சதவீதம் ஆகும்.

இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் 10,495 மாணவர்களும், 11,576 மாணவிகளும் என 22,071 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,296 மாணவர்களும், 10,743 மாணவிகளும் என மொத்தம் 20,039 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90.79 சதவீதம் ஆகும்.

பிளஸ்-2 தேர்வு எழுதிய அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் அவரவர் செல் போன்களிலேயே குறுந் தகவல் மூலம் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால மாணவர்கள் சிரமம் இன்றி வீட்டில் இருந்தபடியே தங்கள் மதிப்பெண்ணை தெரிந்து கொண்டனர்.

ஒவ்வொரு பள்ளியிலும் மதிப்பெண் குறித்த விபரத்தை அறிய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. #Plus2Results

Tags:    

Similar News