செய்திகள்

கிரானைட் தொழில் அதிபரின் சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

Published On 2019-04-05 09:19 GMT   |   Update On 2019-04-05 09:19 GMT
மதுரை கிரானைட் தொழிலதிபரின் ரூ.4¾ கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் சேட். கிரானைட் தொழில் அதிபரான இவர் மேலூர் சுற்று வட்டார பகுதிகளில் கிரானைட் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியாக முகமது இப்ராகிம் சேட் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கீழவளவு, தும்பைப்பட்டி, திருவாதவூர், சூரக்குண்டு ஆகிய இடங்களில் முகமது இப்ராகிம் சேட்டுக்கு சொந்தமாக ரூ. 4 கோடியே 70 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை மதுரை அமலாக்கப்பிரிவினர் முடக்கியுள்ளனர்.

Tags:    

Similar News