search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துக்கள் முடக்கம்"

    • யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், இக்பாலின் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.
    • இக்பாலின் 4 மகன்கள் மற்றும் சகோதரர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிறையில் உள்ளனர்.

    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இக்பால்(வயது 60). இவர் மீது சட்டவிரோத சுரங்கம், நில ஆக்கிரமிப்பு, பெண்களை துஷ்பிரயோகம் செய்தல், ஏமாற்றுதல், அரசு சொத்துகளை அபகரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. ஆவார். அவரது பதவி காலம் முடிந்ததும் அவர் தனது தம்பி மஹ்மூத் அலியை எம்.எல்.சி. ஆக்கினார். பகுஜன் சமாஜ் ஆட்சியின்போது இக்பாலுக்கு அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், இக்பாலின் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

    இதையடுத்து இக்பால் மற்றும் அவரது மகன்கள் அப்துல்வாஜித், ஜாவேத், முகமது அப்சல், அலிஷான் மற்றும் சகோதரர் ஆகியோர் மீது சட்டவிரோத சுரங்கம், நில அபகரிப்பு உள்ளிட்ட 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாநில போலீசார் மற்றும்சி.பி.ஐ., அமலாக்கத்துறை தனித்தனியே இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறது. இக்பாலின் 4 மகன்கள் மற்றும் சகோதரர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிறையில் உள்ளனர். தற்போது இக்பால் தலைமறைவாக உள்ளார்.

    இக்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க, அவர்கள்சது பாஸ்போட்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. அவர்கள் மீதான வழக்குகள் நடந்து வருகின்றன. இதனிடையே இக்பாலுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள முறைகேடான சொத்துக்கள் கண்டறியப்பட்டன. அவற்றை தற்போது உத்தரபிரதேச காவல்துறை முடக்கி உள்ளது. சமூக விரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 14 (1) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில், சஹாரன்பூரில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலமும், லக்னோவின் கோமதி நகர் பகுதியில் உள்ள 7 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவும், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 80,000 சதுர மீட்டர் நிலமும் அடங்கும்.

    கிரேட்டர் நொய்டாவில் இக்பாலின் கூட்டாளிகள் டவுன்ஷிப்பை உருவாக்க திட்டமிட்டனர். இதற்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கினார், அதுவும் முடக்கப்பட்டு உள்ளது. மேலும் இக்பாலுக்குச் சொந்தமான மேலும் பல முறைகேடான சொத்துக்களை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருவதாகவும், அதன்படி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் மட்டுமின்றி அவர்களின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
    • 460 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 1006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் கஞ்சா, ஹெராயின், கொகைன் போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

    'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் மதுரையை சேர்ந்தவர்களான காளை அவரது மனைவி பெருமாயி, அவரது உறவினர் அய்யர் ஆகியோர் தொடர்ந்து கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு சொந்தமான 8 வீட்டுமனைகள், பல ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலங்கள் என ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துகள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராசார்க் பொறுப்பேற்ற பின் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 651 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. அதேபோல 159 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களின் ரூ.11 கோடிக்கு மேலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 7 நாட்களில் 232 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 332 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

    இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் மட்டுமின்றி அவர்களின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 460 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 1006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கி குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

    இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மதுரையில் கஞ்சா வியாபாரிகளின் ரூ.8 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
    • மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மதுரை

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் பணிகளில் போலீ சார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களது சொத்துக்கள் மட்டுமின்றி உறவினர்களின் அசையும்- அசையா சொத்துக்களும் முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் மதுரையின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்து அவர்களது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்தில் 322 கிலோ கஞ்சா, கார், லாரி மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் ஒட்டு மொத்த மதிப்பு ரூ.53 லட்சத்து 29 ஆயிரத்து 881 ஆகும்.

    சேடப்பட்டி பகுதியில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.29 லட்சத்து 31 ஆயிரத்து 671 ஆகும். மேலும் இதே இடத்தில் உள்ள மற்றொரு பகுதியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.28 லட்சத்து 71 ஆயிரம் ஆகும்.

    ஒத்தகடை போலீஸ் சரகத்தில் 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.5.5 கோடி ஆகும். நாகமலை புதுக்கோட்டையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 56 லட்சத்து 76 ஆயிரத்து 450 ஆகும்.

    மதுரை மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 559.80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கஞ்சா வியாபாரம் செய்தவர்களின் ரூ.8 கோடியே 18 லட்சத்து 9 ஆயிரத்து 2 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் ஆந்திராவுக்கு சென்று அங்கு கஞ்சா சாகுபடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் மூலம் கஞ்சா மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே ஆந்திராவில் பதுங்கி இருந்து கஞ்சா சாகுபடியில் ஈடுபடும் குற்ற வாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    மேலும் மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் மொத்த வியாபாரி கள், சில்லரை வியா பாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×