செய்திகள்

40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி எதிரொலி: முதல் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்தார் பிரியங்கா காந்தி

Published On 2019-02-14 15:09 GMT   |   Update On 2019-02-14 15:09 GMT
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலால் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியானதால், பிரியங்கா காந்தி தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்தார். #JammuKashmir #CRPF #PriyankaGandhi

பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தர பிரசேத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் கடந்த நான்கு நாட்களாக உத்தர பிரதேசத்தில் கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில் முதன்முதலாக இன்று மாலை பிரியங்கா காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவு செய்தார். பேட்டிக்கு தயாரானபோது, ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் செய்தி குறித்து அறிந்தார். இதனால் உடனடியான தனது முதல் பேட்டியை ரத்து செய்தார். அத்துடன் இரங்கல் தெரிவித்தார்.



பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘இப்போது அரசியலைப் பற்றி பேசுவது பொருத்தமாகாது என நினைக்கிறேன். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற தாக்குதல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஒட்டுமொத்த நாடே உறுதுணையாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். #JammuKashmir #CRPF #PriyankaGandhi
Tags:    

Similar News