செய்திகள்

பா.ம.க. தயாரித்த நிழல் பட்ஜெட் - டாக்டர் ராமதாஸ் நாளை வெளியிடுகிறார்

Published On 2019-02-05 03:15 GMT   |   Update On 2019-02-05 03:15 GMT
பாமக தயாரித்த 2019-2020-ம் ஆண்டுக்கான, 17-வது பொது நிழல் பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் நாளை வெளியிடுகிறார். #ShadowBudget #PMK
சென்னை:

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பா.ம.க. கடந்த 2003-2004-ம் ஆண்டு முதல் பொது நிழல் பட்ஜெட் அறிக்கைகளை மக்கள் மன்றத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 16 நிழல் பட்ஜெட் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2019-2020-ம் ஆண்டுக்கான, 17-வது பொது நிழல் பட்ஜெட் 6-ந் தேதி (நாளை) வெளியிடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் 6-ந் தேதி (நாளை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பொது நிழல் பட்ஜெட் அறிக்கையை வெளியிடவுள்ளார்.

வழக்கம்போலவே தமிழ்நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம், வேளாண்மை, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு பெருக்கம், வறுமை ஒழிப்பு, பெண் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அற்புதமான ஆலோசனைகள் நிழல் பட்ஜெட் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #ShadowBudget #PMK

Tags:    

Similar News