செய்திகள்

கேரளாவுக்கு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

Published On 2019-01-18 12:13 GMT   |   Update On 2019-01-18 12:13 GMT
கேரளாவுக்கு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்:

கூடலூர்- கேரளா எல்லையான வழிக்கடவு சோதனைச்சாவடியில் கேரள மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிஷ் தலைமையில் சிஜூமோகன், யூசுப் உள்பட போலீசார் வாகனங்களை முழு தணிக்கை செய்த பின்னரே கேரளாவுக்கு அனுமதித்தனர்.

அப்போது மைசூரில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சென்ற கர்நாடகா பதிவு எண் கொண்ட அரசு பஸ்சை நிறுத்தி மதுவிலக்கு போலீசார் சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி அமர்ந்து இருந்த 2 பேரின் பைகளை சோதனை செய்தனர். அதில் பையின் மேற்புறம் காய்கறிகள் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பைகளை முழுமையாக சோதித்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகள் 4 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அந்த பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நவுசாத் (வயது 35), ரபீக் அகமது (41) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது. இது குறித்து வழிக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து நவுசாத், ரபீக் அகமது ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News