செய்திகள்

ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்- சி.வி.சண்முகம் பேட்டி

Published On 2018-12-21 11:01 GMT   |   Update On 2018-12-21 11:01 GMT
காவல்துறையினர் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தி வருவதால் அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். #ministercvshanmugam #ponmanickavel

விக்கிரவாண்டி:

விழுப்புரம் கூட்டேரிப்பட்டு மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து எச்சரிக்கை ஒளிரும் விளக்கை சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: மேகதாது அணை பிரச்சினைபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: காவிரி ஆறு மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். அதன்படி காவிரி ஆற்றில் அணை கட்டும் போது சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதி பெறாமல் எந்த ஒரு அணையும் கட்டக் கூடாது என்பது சட்டவிதி. மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கேள்வி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றசாட்டுகள் கூறப்படுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?


பதில்: ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கீழ் பணியாற்றும் காவல்துறையினர் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகின்றனர். அதற்கு அவர் பதிலளிக்க வேண்டும். அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #ministercvshanmugam #ponmanickavel 

Tags:    

Similar News