செய்திகள்

சென்னையில் ரூ.43 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - பெண் தொழில் அதிபர் கைது

Published On 2018-12-16 05:44 GMT   |   Update On 2018-12-16 05:44 GMT
போலி விலைப்பட்டியல் மூலம் சென்னையில் ரூ.43 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்த பெண் தொழில் அதிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GST

சென்னை:

சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் பூனம் சர்மா. இவர் 3 நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களின் இயக்குனராக இருக்கிறார்.

இந்த நிறுவனங்களுக்கு பொருட்கள் எதுவும் வாங்காமல் போலி விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் போலி விலைப்பட்டியல் தயாரித்து தங்கள் பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.

இதன் மூலம் ரூ.43 கோடியே 52 லட்சம் ஜி.எஸ்.டி. வரி மோசடி செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தகவலை ஜி.எஸ்.டி. இயக்குனரக சென்னை வடக்கு முதன்மை கமி‌ஷனர் ராகேஷ் குமார் சின்கா தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. வரி மோசடி சட்டத்தின் கீழ் பூனம் சர்மா நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜி.எஸ்.டி. வரி மோசடி வழக்கில் இவரையும் சேர்த்து சென்னையில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு கடந்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வர்த்தகர் தனராம் என்பவர் கைது செய்யப்பட்டார். 29-ந்தேதி திலீப்குமார் (45). கைதானார். இவர் ஸ்டீல், ரசாயன பொருட்கள், பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தோல் பொருட்கள் விற்பனை செய்து வந்தார். #GST

Tags:    

Similar News