செய்திகள்

வத்தலக்குண்டு அருகே லாரி மோதி விவசாயி மூளை சிதறி பலி

Published On 2018-12-09 13:13 GMT   |   Update On 2018-12-09 13:13 GMT
வத்தலக்குண்டு அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி மூளை சிதறி பலியானார்.

வத்தலக்குண்டு:

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). விவசாயி. இவருக்கு அங்கீதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வேலை நிமித்தமாக திண்டுக்கல் வந்து விட்டு மீண்டும் போடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

வத்தலக்குண்டு பைபாஸ் ரோடு பகுதி ருத்ரகாளியம்மன் கோவில் அருகே சென்ற போது தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் முருகேசன் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் பட்டி வீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவைச் சேர்ந்த மணிமுத்து பிச்சையிடம் விசாரித்து வருகின்றனர்.

வத்தலக்குண்டு பகுதியில் லாரிகள் அதிவேகமாக சென்று வருவதால் விபத்துக்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்ளாததால் வாகனங்கள் விதிகளை மீறி செல்கின்றன.

சில லாரி டிரைவர்கள் லைசென்ஸ் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் ஓட்டி வருகின்றனர். எனவே புறநகர் பகுதியில் பேரிகார்டு அமைக்க வேண்டும். விதி மீறி அதி வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News