செய்திகள்

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் - சிகிச்சை தொகை ரூ.5 லட்சமாக உயர்வு

Published On 2018-11-30 07:28 GMT   |   Update On 2018-11-30 07:28 GMT
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் அதிகபட்ச தொகை ரூ.2 லட்சத்தில் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #treatmentamount #CMCHIS #treatmentamountraised
சென்னை:

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய குடும்பங்கள் ஆண்டு வருவாய் 72,000/- க்கு கீழ் உள்ள பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின்கீழ் தரமான அறுவைச்சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை பதிவுபெற்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை முறைகளுக்கும் மற்றும் 23 அறிதல் கண்டுப்பிடிப்பு முறைகளுக்கும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் அதிகபட்ச தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார். #treatmentamount #CMCHIS #treatmentamountraised  
Tags:    

Similar News