செய்திகள்

தேனியில் ஆசிரமத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

Published On 2018-11-28 12:03 GMT   |   Update On 2018-11-28 12:03 GMT
தேனி அருகே உள்ள ஆசிரமத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி:

தேனி அருகே உள்ள அரண்மனைபுதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வளாகத்திலேயே வேதபுரி ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு தினமும் பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் துறவிகள் மற்றும் மடாதிபதிகள் வந்து செல்கின்றனர். வேத பாட சாலை வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில் ஓம்காரானந்தா என்பவர் நிர்வாகியாக உள்ளார்.

இன்று ஆசிரமத்துக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு தபால் வந்தது. அதில் 15 நாட்களுக்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு இப்பகுதி தரைமட்டமாக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஆசிரம நிர்வாகி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் கியூ பிரான்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடிதத்தில் அனுப்புனர் முகவரியில் தர்மபுரி என்ற வாசகம் அரைகுறையாக இடம்பெற்றிருந்தது. எனவே தர்மபுரியில் இருந்து வந்ததா? எனவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News