செய்திகள்

வராகநதி வெள்ளத்தை வேடிக்கை பார்த்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி

Published On 2018-11-17 11:36 GMT   |   Update On 2018-11-17 11:36 GMT
வராகநதி வெள்ளத்தை வேடிக்கை பார்த்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

பெரியகுளம்:

கஜா புயல் காரணமாக கொடைக்கானல் மலை அடிவாரத்தில் கனமழை பெய்தது. இதனால் காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் முழுவதும் பெரியகுளம் நகர்பகுதியில் ஓடும் வராகநதியில் பெருக்கெடுத்து ஓடியது.

நீண்டநாட்களுக்கு பிறகு வராக நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் ஏராள மானோர் திரண்டு ரசித்தனர். அதன்படி பெரியகுளம் பங்களாபட்டி தெற்கு தெருவை சேர்ந்த முத்துப் பாண்டி (வயது20) என்பவரும் புதுப்பாலம் பகுதியில் வராகநதி வெள்ளத்தை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி வராகநதிக்குள் விழுந்தார். அப்போது மழை வெள்ளம் அவரை அடித்துச்சென்றது. அதிர்ச்சி அடைந்த மக்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முத்துப்பாண்டி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை உடலை மீட்டனர்.

Tags:    

Similar News