செய்திகள்

பர்கூர் நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

Published On 2018-11-11 16:31 GMT   |   Update On 2018-11-11 16:31 GMT
பர்கூர் நகரில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. #denguefever
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தேர்வுநிலை பேரூராட்சியில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் மூலம் பஸ் நிலையம், பேரூராட்சி கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள், பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கா வண்ணம், தேவையற்ற பொருட்கள் பேரூராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டது. அத்துடன் சின்னபர்கூர், உயர்நிலைப்பள்ளி தெரு பகுதியில் உள்ள வீடுகள், தெருக்களில் கொசு புகை அடிக்கப்பட்டது. 

டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது பேரூராட்சி செயல் அலுவலர் மலர்மாறன், சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  #denguefever 
Tags:    

Similar News