செய்திகள்

கமல்ஹாசன் தன்னை நம்பியவர்களை கைவிட்டு விடுவார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2018-10-17 04:30 GMT   |   Update On 2018-10-17 04:30 GMT
நடிகர் கமல்ஹாசன் தன்னை நம்பியவர்களை கைவிட்டு விடுவார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். #ADMK #RajendraBalaji #KamalHaasan
விருதுநகர்:

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடிகர் கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அது வளர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் ஆபத்து என்றார்.

இது குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒரு தீய சக்தி என்றும், சப்பாணி குழந்தை என்று விமர்சித்த அமைச்சரை பெண்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரை பெண்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறி இருந்தார்.

இது குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நடிகர் கமல்ஹாசன் என்னை தீய சக்தி என்று சொல்கிறார். நான் தீய சக்தியா? நல்ல சக்தியா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

நான் கடந்த 1996-ம் ஆண்டு முதல் மக்களையும், பெண்களையும் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன்.

தொடர்ந்து மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறேன். இதே போல் கமல்ஹாசனும் மக்களையும், பெண்களையும் சந்தித்து தேர்தலில் போட்டியிட வேண்டும்.


கமல்ஹாசனை நம்பி யாரும் செல்லக்கூடாது. அவரை நம்பிச் சென்றவர்களை கைவிட்டு விடுவார். கவுதமி கூட என் மகளுக்காக வெளியேறுகிறேன் என்று கூறியுள்ளார். இது பற்றி மக்கள் தான் கருத்து கூற வேண்டும்.

தமிழகத்தில் பாலியல் ரீதியான புகார்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எடப்பாடி தலைமையிலான அரசு எவ்வித குற்றச்செயல்களுக்கும் அனுமதி அளிக்காது. இரும்புக்கரம் கொண்டு அடக்கும். ரெயில் கொள்ளையில் கூட கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கண்டவாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #RajendraBalaji
Tags:    

Similar News