செய்திகள்

சேலத்தில் சமையலர் மீதான தீண்டாமை கொடுமை- 3 பேர் கைது

Published On 2018-10-14 05:03 GMT   |   Update On 2018-10-14 05:03 GMT
சேலத்தில் அரசுப் பள்ளி சமையலர் மீதான தீண்டாமை கொடுமை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். #SalemSchoolCook
சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதிக்குட்பட்ட குப்பன்கொட்டாய் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சமையலராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியை தொடங்கியபோது, அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் சமைத்த உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிடுவதை ஏற்க முடியாது என இதர சாதியினர் கூறியுள்ளனர்.

ஜோதியை இடமாற்றம் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்போம் என்றும் கூறியுள்ளனர்.


இந்த தீண்டாமை கொடுமை வெளியில் தெரியவந்ததும், ஜோதிக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

இந்நிலையில், சேலம் தீண்டாமை கொடுமை தொடர்பாக பள்ளி ஆசிரியர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம்  விசாரணை நடைபெற்று வருகிறது. #SalemSchoolCook
Tags:    

Similar News