செய்திகள்

சென்னையில் கிளப், மன மகிழ்மன்றங்களில் அதிரடி சோதனை - 23 பேர் கைது

Published On 2018-09-24 06:01 GMT   |   Update On 2018-09-24 06:04 GMT
சென்னையில் கிளப், மனமகிழ்மன்றங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் விதிகளை மீறி செயல்பட்டதாக 19 கிளப்புகளில் பணியாற்றிய 23 பேர் கைது செய்யப்பட்டனர். #PoliceRaid
சென்னை:

சென்னையில் தனியார் கிளப் மற்றும் மனமகிழ் மன்றங்களில் விதிமுறைகள் மீறப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், 19 கிளப் மற்றும் மனமகிழ்மன்றங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை, அடையாறு, பள்ளிக்கரணை, தாம்பரம், ராயலாநகர், திருவல்லிக்கேணி, துரைப்பாக்கம், தேனாம்பேட்டை, கண்ணகி நகர், வேளச்சேரி, சாஸ்திரி நகர், கானாத்தூர், நீலாங்கரை ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

அந்தந்த பகுதி இன்ஸ்பெக்டர்கள் நள்ளிரவில் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் கிளப்பில் உறுப்பினர் அல்லாத வெளிநபர்கள் மது அருந்தியதும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் கிளப் செயல்பட்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து 19 கிளப்புகளில் பணியாற்றிய 23 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கிளப் மேலாளர்களும் அடக்கம். விதிகளை மீறி செயல்பட்டதாக 19 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னையில் கிளப்புகளில் இதுபோன்ற சோதனை தொடரும் என்றும், எனவே கிளப் உரிமையாளர்கள் விதிமீறலில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர். #PoliceRaid

Tags:    

Similar News