என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "arrested"
- போலீசார் லாரியில் சோதனை செய்தபோது அதில் சுமார் 3 யூனிட் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது.
- தப்பியோடிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், ஏட்டு ராஜா ஆகியோர் ராமநாதபுரம் நீலகண்டி ஊரணி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனையிடுவதற்காக தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அந்த வாகனம் நிற்காமல் அந்த இடத்தை மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. சற்று தூரம் தள்ளி லாரி நின்றதும் அதிலிருந்த 3 பேரும் கீழே குதித்து தப்பி ஓடினர். தொடர்ந்து போலீசார் லாரியில் சோதனை செய்தபோது அதில் சுமார் 3 யூனிட் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தப்பியோடிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி டிரைவரான முதலூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 32), லோகநாதன் என்ற கபில் (27), மதுரசேகர் (31) ஆகிய 3 பேரும் உரிய அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த மணல் கடத்தலுடன் தொடர்புடைய முதலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, அவரது மகன் மனோஜ், கார்த்திக், கந்தபாண்டி, விக்னேஷ், கபில், ராமர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் பஜார் போலீசாரின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
- கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், பயணி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
- இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடி அருகே இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கு காத்திருந்த பயணிகளை கஞ்சா போதையில் கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் சிலர் ரெயில் நிலைய நடைமேடையில் இருந்த பிளாஸ்டிக் பைப்புகளை பிடுங்கி கையில் சுத்திக்கொண்டே செல்கின்றனர். அப்போது ரெயிலுக்கு காத்திருக்கும் சில பயணிகளையும் கல்லூரி மாணவர்கள் போதையில் தாக்குகிறார்கள்.
ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளை வயது வித்தியாசம் பாராமல், கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் பார்ப்போரை அச்சமடையச் செய்துள்ளது.
கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், பயணி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை தாக்கிய போதை இளைஞர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுபாஷ் (20), இப்ராஹிம் (23) மற்றும் 14 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கஞ்சா போதையில் அட்டூழியம்! - 3 இளைஞர்கள் கைது இடம் :இந்து கல்லூரி ரயில் நிலையம், சென்னை#collagestudent #Drugs #railwaystation #Avadi #viralvideo #maalaimalar pic.twitter.com/htQDjMRQ8W
— Maalai Malar தமிழ் (@maalaimalar) November 26, 2024
- இம்ரான்கானின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்ய கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
- பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செல்போன் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 72) மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் அரசு கருவூலத்துக்குச் சொந்தமான பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். எனவே இஸ்லாமாபாத் கோர்ட்டு அவர்களுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. அதன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய விட்டதாகவும் இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இஸ்லாமாபாத் கோர்ட்டு அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்தநிலையில் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது. எனினும் மற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வருவதால் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
இதற்கிடையே இம்ரான்கானின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்ய கோரி வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. மேலும் பாதுகாப்பு கருதி ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. அதேபோல் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செல்போன் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டன.
ஆனால் இதனை பொருட்படுத்தாமல் இம்ரான்கான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பஞ்சாப் மாகாணத்தில் நுழைந்தபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. எனவே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 4 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
- சிக்னல்களை மதிக்காமல் போக்குவரத்து விதிகளை மீறி சென்றுள்ளார்.
- குடி போதையில் ஆபத்தான முறையில் வானம் ஓட்டியதாக வழக்கு.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பையனூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. மலையாள திரைப் பட நடிகரான இவர் சம்பவத்தன்று இரவு தனது காரில் வேகமாக சென்றுள் ளார். அங்கமாலி-களமச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சிக்னல்களை மதிக்காமல் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக சென்றிருக்கிறார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அத்தானி மற்றும் ஆலுவா பகுதியில் காரை நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர். ஆனால் அதன்பிறகும் நடிகர் தனது காரை நிறுத்தாமல் வேகமாகவும், தாறுமாறாகவும் காரை ஓட்டிச் சென்றார். இதையடுத்து நடிகரின் காரை போலீசார் தங்களின் வாகனத்தில் காரை பின்தொடர்ந்து சென்றனர்.
களமச்சேரி பகுதியில் நடிகரின் காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த நடிகர் கணபதிக்கு மது பரிசோனை செய்யப்பட்டது. அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடிகரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அவர் மீது குடி போதையில் ஆபத்தான முறையில் வானம் ஓட்டியதாகவும், போலீசாரின் அறிவுறுத்தல்களை மீறியதாகவும் வழக்கு பதியப்பட்டது. குடிபோதையில் காரை வேகமாகவும், தாறு மாறாகவும் காரை ஓட்டிச் சென்ற நடிகரை போலீசார் கைது செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போலீசாரின் புலன் விசாரணை வளையத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
- 2 பேரும் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் திரைப்படம் இரவு காட்சிகளாக வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் மர்மநபர்கள் 2 பேர் அந்த தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான 2 நபர்களின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
மேலும் தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் அதன் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் குமார் தலைமையில் விசாரணையை தொடங்கினர்.
மேலப்பாளையம் போலீசார் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரின் புலன் விசாரணை வளையத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட வர்களில் ஒருவரை போலீசார் நேற்று முன்தினம் கண்டு பிடித்தனர். அவர் மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சேர்ந்த முகமது யூசுப் ரசின் என்பது தெரியவந்து. அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது மேலப்பா ளையம் ஆசிரான் மேலத் தெருவை சேர்ந்த செய்யது முகமது புகாரி(29) என்பது தெரியவந்தது. அவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் 2 பேரும் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, அவர்களிடம் பெட்ரோல் குண்டுகளை வீசியது குறித்து விசாரித்தபோது அமரன் திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதால் அதற்கு ஏதாவது ஒன்று செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறு ஈடுபட்டதாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்த வாலிபர் இவர்கள் 2 பேரின் கூட்டாளி என்பதும், அவரும் மேலப்பாளையத்தில் தான் பதுங்கி இருக்கிறார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
- போலீசாரின் தீவிர விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட மலப்புரத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி 3.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
நேற்று இரவு நகைக்கடை உரிமையாளர் யூசுப் தனது சகோதரருடன் நகைக்கடையை மூடிவிட்டு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த கும்பல் இருவரையும் தாக்கி, பைக்கில் வைத்திருந்த 3.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட மலப்புரத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரவீன், விஜின், சதீசன், நிகில் ஆகியோரிடம் தங்கம் இல்லாததால் மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- எஞ்சிய வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன.
- தோஷகானா வழக்கில் இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதில் பல வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன.
அந்த வகையில் அரசு கருவூலத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தோஷகானா வழக்கில் இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது. எனினும் இம்ரான்கான் மீது இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
இந்த நிலையில் தோஷகானா வழக்கில் ஜாமின் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே மற்றொரு வழக்கில் இம்ரான்கானை போலீசார் கைது செய்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிப் இ இன்சாப் கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக இம்ரான்கான் மீது பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கொலை செய்யப்படுவதற்கு முன்பு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
- பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கர்ஹாலில் உள்ள கஞ்சாரா நதி பாலம் அருகே தலித் இளம்பெண்ணின் உடல் சாக்கு பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் குடும்பத்தினர் பிரசாந்த் யாதவ் என்ற நபர் கொலை செய்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் கொலையின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கர்ஹால் இடைத்தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களிக்கப்போவதாக அந்தப் பெண் கூறி உள்ளார். இது பிரசாந்தை கோபப்படுத்தி உள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரசாந்த் அந்த பெண்ணை மிரட்டியதாக குடும்பத்தினர் கூறினர்.
அந்த பெண்ணிற்கு நவம்பர் 19-ந்தேதி மிரட்டல் விடுக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
2 சந்தேக நபர்கள் நவம்பர் 19-ந்தேதி அந்த பெண்ணை பைக்கில் அழைத்து சென்றுள்ளனர். இதற்கு அடுத்த நாள் புதன்கிழமை அந்த பெண்ணின் உடல் ஒரு சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி வினோத் குமார் கூறுகையில்,
கர்ஹாலில் நேற்று முன்தினம் இரவு காணாமல் போன 23 வயதான பெண், நேற்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை 2 பேர் மீது புகார் அளித்துள்ளார். ஒருவர் பிரசாந்த் யாதவ் மற்றும் மற்றொருவர் மோகன் கத்தேரியா. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
- மாணவியுடன் இருந்த அந்தரங்க வீடியோவை வம்சி தனது நண்பர்கள் 3 பேரிடம் காட்டினார்.
- அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார்.
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் வம்சி. இவருக்கும் 20 வயது சட்டக்கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.
இந்த நெருக்கத்தை பயன்படுத்தி மாணவியை அடிக்கடி வம்சி வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று வந்தார். அப்படி ஒருமுறை தனிமையான சூழலில் இருந்தபோது மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த வம்சி, அதனை தனது செல்போனில் ரகசியமாக பதிவு செய்து கொண்டார்.
மாணவியுடன் இருந்த அந்தரங்க வீடியோவை வம்சி தனது நண்பர்கள் 3 பேரிடம் காட்டினார். இதையடுத்து அந்த மாணவியை தங்களுக்கும் விருந்தாக்கும்படி வம்சியிடம் அவர்கள் கேட்டனர்.
இதற்கு சம்மதம் தெரிவித்த அவர், தனது காதலியான சட்டக்கல்லூரி மாணவியை விசாகப்பட்டினம் அருகே கிருஷ்ணா நகரில் உள்ள நண்பனின் அறைக்கு அழைத்து வந்தார். அங்கு அவர் மாணவியை வற்புறுத்தி பலாத்காரம் செய்தார். இதை மறைந்து இருந்து வீடியோ எடுத்த நண்பர்கள் 3 பேரும், அறைக்கதவை திறந்து உள்ளே வந்தனர்.
பின்னர் அந்த மாணவியை மிரட்டி அவர்களும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகும் வம்சியும், அவனுடைய நண்பர்களும் மாணவியை அவ்வப்போது மிரட்டி தங்களது ஆசைக்கு உடன்பட வற்புறுத்தி வந்தனர். அவர்களது தொல்லை தாங்கமுடியாத அந்த மாணவி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது வீட்டில் இருந்த மாணவியின் தந்தை, அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தந்தையிடம் மாணவி கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வம்சி மற்றும் அவருடைய 3 நண்பர்களையும் கைது செய்தனர்
- தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.
- சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் விமர்சனத்தை எழுப்பியது. அத்துடன் பல்வேறு காவல்நிலையங்களில் கஸ்தூரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
புகார் அடிப்படையில் சென்ன எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து கஸ்தூரி தலைமறைவானார். தவைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்தார். முன்ஜாமினை நீதிமன்றம் நிராகரித்தது.
இதற்கிடையே தலைமறைவானதால் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தேடிவந்தனர். தனிப்படை போலீசாருக்கு கஸ்தூரி ஐதராபாத்தில் மறைந்து இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஐதரபாத்திற்கு சென்று கஸ்தூரியை கைது செய்தனர்.
ஐதராபாத்தில் ககைது செய்யப்பட்ட கஸ்தூரி நாளை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை அடக்க கனடா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட இருந்தது.
- இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.
கனடாவில் இந்து கோவிலுக்குள் பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போராட்டம் நடத்த இருந்தார்.
இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை அடக்க கனடா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட இருந்தது.
இந்நிலையில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்டத்திற்கு முன்பே அர்ஜூன் சம்பத் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இவ்விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.
இதற்கிடையே கனடாவின் பிரம்ப்டன் நகரில் இந்து கோவிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்ணை ரத்த வெள்ளத்தில் சாலையில் வீசி விட்டு தப்பி சென்று விட்டார்.
- இளம்பெண்ணை கற்பழித்தது யார் என்று போலீசார் 10 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
புதுடெல்லி:
ஒடிசாவை சேர்ந்த சமூக சேவகி மற்றும் ஆராய்ச்சியாளரான இளம்பெண் வீட்டில் தகவல் ஏதும் சொல்லாமல் டெல்லிக்கு வந்தார்.
அவர் புவனேஸ்வரில் உள்ள உத்கல் காலச்சார பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். ஆராய்ச்சியாளராகவும், சமூக துறையில் 8 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தவர்.
இது குறித்து ஒடிசா பூரி போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி வந்த இளம்பெண் 10-ந்தேதி இரவில் சராய் காலே கான் பகுதியில் ஒரு கடை முன் பகுதியில் ரோட்டோரத்தில் அமர்ந்திருந்தார். அப்போது கடையை அடைத்த வியாபாரி பர்மோத் பாபு ரோட்டோரத்தில் பெண் ஒருவர் அமர்ந்திருப்பதை கவனித்தார்.
அந்த பெண்ணின் அருகில் ஊனமுற்ற பிச்சைக்காரரான முகமது ஷம்சுல் இருந்தார். வியாபாரியும், முகமது ஷம்சுலும் மது போதையில் இருந்தனர்.
இவர்கள் 2 பேரும் அந்த பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து அவளை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அப்போது அந்த வழியாக ஆட்டோவில் சென்ற பிரபு மஹ்தோ அதனை பார்த்தார். உடனே ஆட்டோவை நிறுத்தி அவர் வலுக்கட்டயாமாக அந்த இளம்பெண்ணை ஆட்டோவில் ஏற்றி வனப்பகுதிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரும் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் அந்த பெண்ணை ரத்த வெள்ளத்தில் சாலையில் வீசி விட்டு தப்பி சென்று விட்டார்.
காலையில் அந்த வழியாக சென்ற கடற்படை அதிகாரி ஒருவர் ரத்த வெள்ளத்தில் இளம்பெண் ஒருவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்தவர் என்பதும், ஆராய்ச்சியாளராகவும், சமூக சேவகியாகவும் செயல்பட்டது தெரியவந்தது.
இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இளம்பெண்ணை கற்பழித்தது யார் என்று போலீசார் 10 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். சுமார் 700 சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், 150 ஆட்டோக்களை பிடித்தும் விசாரணை நடத்தினர். 20 நாட்களுக்கு பிறகு இந்த வழக்கில் துப்பு துலங்கியது. ஆட்டோ டிரைவர் பிரபு மஹ்தோவை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் தான் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி வனப்பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்ததையும் மேலும் இந்த சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டனர் என்று அந்த வியாபாரியையும், பிச்சைக்காரரையும் அடையாளப்படுத்தினர்.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் தொடர்ந்து மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே டெல்லி வெல்கம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் வடகிழக்கு பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
போலீசார் சிறுமியை தேடி வந்தனர். சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது சிறுமி அந்த பகுதியை விட்டு வெளியே செல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று சோதனை நடத்தினர். ஒரு தம்பதியின் வீட்டில் இருந்து மயங்கிய நிலையில் சிறுமியை மீட்டனர். அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
அந்த பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று வடக்கு பகுதிக்கு கடைக்கு வந்த சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து தனக்கு உதவி தேவைப்படுகிறது என்று வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறினார். மேலும் தம்பதியினர் அந்த சிறுமியை விற்க திட்டமிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்