என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl murdered case"

    • சிறுமி கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானதாக கூறப்பட்டது.
    • சித்தாந்தின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் ஜானவி.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் காந்திகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சித்தாந்த். இவரது மகள் ஜானவி (வயது 7). இந்த சிறுமி கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானதாக கூறப்பட்டது. அதாவது மாடியில் விளையாடியபோது கால் தவறி விழுந்து விட்டதாக கூறப்பட்டது. அதன்பேரில் காந்திகஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில், சிறுமி பலியான வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியை சித்தாந்தின் 2-வது மனைவி ராதா கீழே தள்ளி விட்டு கொலை செய்தது தெரியவந்தது.

    சித்தாந்தின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் ஜானவி. இந்த சிறுமியின் தாய் கடந்த 2023-ம் ஆண்டு இறந்து விட்டார். அதன்பிறகு, சித்தாந்த் ராதாவை 2-வதாக திருமணம் செய்திருந்தார்.

    இந்த நிலையில், பக்கத்து வீட்டில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளில் ஜானவி 3-வது மாடியில் இருந்து விழுந்தபோது ராதா அருகில் நிற்பது தெளிவாக பதிவாகி இருந்தது. அதாவது 3-வது மாடியில் இருக்கையை மாற்றி போட்டு, அதன்மீது ஜானவியை ராதா ஏற வைத்ததால் தவறி விழுந்தது தெரிய வந்துள்ளது. அந்த காட்சியை பக்கத்து வீட்டுக்காரர் சித்தாந்திற்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த காட்சிகள் மூலமாக காந்திகஞ்ச் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு தாய் ராதாவை கைது செய்தனர்.

    • சிறுமியை கடத்தி செல்லும் காட்சி கேமராவில் பதிவாகி இருந்தது.
    • சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி விஜய நகரில் வசித்து வந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் இருந்தாள். அந்த சிறுமியின் தந்தை பெயிண்டராகவும், தாய் வீட்டு வேலையும் செய்து வந்தனர். அவளது தாய், விஜயநகர் அத்யபாக் நகரில் உள்ள வீட்டுக்கு வேலைக்கு சென்றார்.

    அப்போது தாயுடன் அந்த சிறுமியும் சென்றுள்ளாள். அவளது தாய் வீட்டிற்குள் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ரித்தேஷ் குமார் (வயது 35) என்பவர் சிறுமியை கடத்தி சென்று கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் சிறுமியின் உடலை அருகாமையில் உள்ள ஒரு கொட்டகைக்குள் போட்டு விட்டு தப்பி ஓடினார்.

    இது குறித்து அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தனர். அதில் ரித்தேஷ் குமார் சிறுமியை கடத்தி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அவர் ஹூப்பள்ளியில் கூலி வேலை செய்து வருவதும், வீடு எதுவும் கிடைக்காததால் தாரிஹாலா பாலத்திற்கு அருகில் உள்ள பழைய கொட்டகையில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    இதையடுத்து அசோக் நகர் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் அன்னபூர்ணா தலைமையிலான போலீசார் விசாரணைக்காக ரித்தேஷ் குமாரை அவர் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது தாரிஹால் பாலம் அருகே அழைத்து சென்றபோது ரித்தேஷ் குமார் தப்பிப்பதற்காக போலீஸ் வாகனத்தின் மீது கற்களை வீசி போலீசாரை கல்லால் தாக்கி தப்ப முயன்றார்.

    இந்த தாக்குதலில் போலீஸ்காரர்கள் மொராபா மற்றும் வீரேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். இதனால் தற்காப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் அன்னப்பூர்ணா தனது துப்பாக்கியால் ரித்தேஷ் குமாரை சுட்டார்.

    இதில் ரித்தேஷ் குமார் காலில் குண்டு பாய்ந்தது. இருப்பினும் அவர் தப்பிக்க முயன்றபோது அவரது நெஞ்சு பகுதியில் சுட்டார். இதில் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ரித்தேஷ் குமார் உடல் கே.எம்.சி.ஆர்.ஐ. மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்த போலீசார் மொராபா மற்றும் வீரேஷ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    என்கவுன்டரில் குற்றவாளி கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கே.எம்.சி. மருத்துவமனை முன்பு கொண்டாடினர். மருத்துவமனைக்கு வருகை புரிந்த போலீஸ் கமிஷனர் சசிகுமாருக்கு அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மேலும் எம்.எல்.ஏ பிரசாத் அப்பாய்யா மற்றும் தலைவர்கள் கே.எம்.சி.ஆர்.ஐ மருத்துவமனைக்குச் சென்று கமிஷனரை வாழ்த்தினர். சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

    கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டை சேர்ந்த 4 பேர், ஒவ்வொரு போலீஸ் அதிகாரிகளிடமும் ஒவ்வொரு பதில் கூறுவதால் விசாரணையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
    கவுண்டம்பாளையம்:

    கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 60 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதில் சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த விஜயகுமார், கவுதமன், சந்தோஷ்குமார், துரைசாமி ஆகிய 4 பேர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகின்றனர். முதலில், சமபவத்தன்று நாங்கள் ஊரிலேயே இல்லை என்றனர். பின்னர் மாயமான சிறுமியை நாங்களும் சேர்ந்து தான் தேடினோம் என மாற்றி கூறினர். இதனால் போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் துருவி, துருவி விசாரித்தனர்.

    நேற்று முன்தினம் இரவு முதலே அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் 4 பேரும், ஒவ்வொரு போலீஸ் அதிகாரிகளிடமும் ஒவ்வொரு பதில் கூறுவதால் விசாரணையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, சிறுமி கொலை வழக்கை கண்டித்தும், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை கண்டித்தும் துடியலூர் பகுதிகளில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பு சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

    நேற்று மாலை கணுவாய் பஸ் நிறுத்தம் அருகே திரண்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பினர், சிறுமியை கொன்றவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதுதொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்த தேவராஜ், சரவணன் மற்றும் சிலர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஆத்தூர் அருகே பாலியல் அத்துமீறலுக்கு பணிய மறுத்த 13 வயது சிறுமியை கொன்ற கொடூரனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #Ramadoss #PMK
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாலியல் அத்துமீறலுக்கு பணிய மறுத்த 13 வயது சிறுமியை அவரது அண்டை வீட்டுக்காரன் கொடூரமான முறையில் தலையை அறுத்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. குழந்தையாகவும், சகோதரியாகவும் பார்க்க வேண்டிய சிறுமியை சிதைக்க முயன்றதுடன், படுகொலையும் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

    சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த சுந்தரபுரத்தில் வசிக்கும் விவசாயி சாமிமுத்து. அவரது மனைவி சின்னப்பொண்ணு. அவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு மணமாகி விட்ட நிலையில் மகனும், இளைய மகளும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். அவர்களில் மகள் ராஜலட்சுமி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 8-ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

    இவர்களுக்கு அடுத்த வீட்டில் தினேஷ்குமார் என்ற 27 வயது இளைஞன் அவரது மனைவி சாரதாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். கதிர் அறுக்கும் இயந்திரத்தை வாடகைக்கு இயக்கும் தினேஷ்குமாருக்கு 4 வயதில் ஆண்குழந்தை உள்ளது. இரு குடும்பத்தினரும் நட்புடன் பழகிவந்துள்ளனர்.

    குழந்தையுடன் விளையாடவும், பூப்பறிக்கவும் தினேஷ்குமார் வீட்டுக்கு சிறுமி ராஜலட்சுமி அடிக்கடி சென்று வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

    அப்போதெல்லாம் சிறுமியிடம் தினேஷ்குமார் பாலியல் சீண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுபற்றி சிறுமிக்கு தெரியாது என்பதால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை.

    கடந்த 19-ந்தேதி ஆயுதபூஜையன்று தமது வீட்டுக்கு வந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ய தினேஷ்குமார் முயன்றுள்ளான். ஆனால், அவனிடமிருந்து தப்பித்த சிறுமி வீட்டுக்கு சென்று நடந்த சம்பவங்களை தாயிடம் கூறியுள்ளார். அதன்பின்னர் தாயின் அறிவுரைப்படி தினேஷ்குமார் வீட்டுக்கு செல்வதை சிறுமி தவிர்த்துள்ளார். ஆனால், 22.10.2018 தினேஷ்குமாரின் மனைவி அழைத்ததால், சிறிது நேரம் கழித்து அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு மனைவி இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு சிறுமியை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். அதனால் அச்சமடைந்த சிறுமி வீட்டுக்குத் தப்பிச் சென்று தாயிடம் புகார் செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் நடந்தவை அனைத்தும் தினேஷ் குமாரின் மனைவி சாரதாவுக்கு தெரிய வந்ததாகவும், அவர் கணவனை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார் அரிவாளுடன் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரைத் தாக்கி மயக்கமடையச் செய்திருக்கிறார். பின்னர் சிறுமியின் கழுத்தை வெட்டித் துண்டாக்கியுள்ளார். தொடர்ந்து சிறுமியின் தலையை சாலையில் வீசி விட்டு, வீட்டுக்குச் சென்ற தினேஷ்குமாரை அவரது மனைவி சாரதாவும், அவரது தம்பியும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

    மனிதக் கொடூரன் தினேஷ்குமாரின் செயலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தினேஷ் குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படாதது தவறு; கண்டிக்கத்தக்கது ஆகும்.

    ஒன்றும் அறியாத சிறுமிகளிடம் தங்கள் பாலியல் வெறியைத் தீர்த்துக் கொள்ள துடிப்பவர்கள் திருந்துவதற்கு வாய்ப்புள்ள மனிதர்களாக இருக்க முடியாது. அதனால், இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடித்து, தினேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து அவருக்கு மிக மிகக் கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #PMK
    ×