செய்திகள்

தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லையா? - மு.க.ஸ்டாலின் புகாருக்கு தமிழிசை பதில்

Published On 2018-09-16 06:37 GMT   |   Update On 2018-09-16 06:37 GMT
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் குற்றம் சாட்டியதற்கு தமிழிசை பதில் அளித்துள்ளார். #MKStalin #TamilisaiSoundararajan #BJP

சென்னை:

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் கட்சியின் சார்பில் நடை பெற்ற முப்பெரும் விழாவில் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திர ராஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதில் வருமாறு:-

4 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு என்ன செய்தது என்று கேட்கிறீர்களே நீங்கள் மத்தியில் ஆண்ட 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தமிழகத்துக்கு செய்த துரோக பட்டியல் ‘தீராத மின்வெட்டு, காவிரி பிரச்சினை, மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர்கள் பிரச்சினை, எய்ம்சில் காங்கிரசின் ஊழல் பங்காளிகள்! இதுதானே!


ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட நாங்கள் தயார். 10 ஆண்டுகளில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவந்த பெரிய திட்டங்கள் பற்றி நீங்கள் பட்டியலிட்டால் ஒன்றுமில்லை என்று அறிவீர்கள்.

எங்களிடம் கேளுங்கள் பதில் சொல்ல பட்டியலுடன் தயாராக இருக்கிறோம். நாங்கள் ரெடி. நீங்கள் ரெடியா?

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சென்னை மற்றும் புறநகர் பெண்கள் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான இலவச மருத்துவ சோதனை வாகனத்தை டாக்டர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

வழக்கமாக மார்பகங்களில் உருவாகும் கட்டியை சோதித்தே புற்றுநோய் தாக்கம் உள்ளதா என்று பரிசோதிப்பார்கள். ஆனால் இந்த நவீன முறையில் சதையின் தன்மையை ஆராய்ந்து புற்றுநோய் வருவதற்கான அறிகுறி உள்ளதா என்பதை முன் கூட்டியே கண்டறிய முடியும் என்றார்.  #MKStalin #TamilisaiSoundararajan #BJP

Tags:    

Similar News