செய்திகள்

சங்கராபுரம் அருகே பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்து விபத்து- 30 பேர் படுகாயம்

Published On 2018-09-13 11:38 GMT   |   Update On 2018-09-13 11:38 GMT
பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்து விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிசிச்சை பெற்று வருகிறார்கள்.

ரிஷிவந்தியம்:

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு புவனேஸ்வரி(7), புனித்(6) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

குமார் தனது குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த முடிவு செய்தார். அதற்காக தனது உறவினர்களை ஒரு மினிலாரியில் அழைத்து கொண்டு தியாகதுருகம் அருகே உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு சென்றார்.

அங்கு காதணி விழா முடிந்தவுடன் குமார் தனது உறவினர்கள் 50 பேருடன் மினிலாரியில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அந்த மினிலாரி நேற்று மாலை தியாகதுருகம் அருகே முடியனூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினிலாரியில் பயணம் செய்த தேவி(21), ராஜேந்திரன்(52), முனியம்மாள்(60), மண்ணாங்கட்டி(58), மேகலை(42), மணி(36), ராணி(35), சினேகா(13), ராதா(32), பானுப்பிரியா(35), சத்யா(24), நல்லம்மாள்(78) உள்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மினிலாரியில் இடிப்பாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News