செய்திகள்

வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு வருத்தமளிக்கிறது- இல.கணேசன்

Published On 2018-09-13 07:43 GMT   |   Update On 2018-09-13 07:43 GMT
வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு வருத்தத்தை அளிக்கிறது என்று தூத்துக்குடியில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். #PetrolPriceHike #BJP #LaGanesan
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு எங்களுக்கும் வருத்தத்தை அளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் விலை உயர்த்தப்பட்டது. உலக அளவில் கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் டாலரின் மதிப்பு உயர்வு காரணமாக தற்போது விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஒரு குழு அமைத்துள்ளார். அந்த குழு வருகிற 15-ந்தேதி விசாரணை நடத்துகிறது. ஒரு சில பொருட்களுக்கு மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் 25 சதவீத விலை குறையும். இதுகுறித்து மத்திய அரசு சில மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதில் உடன்பாடு ஏற்பட்டால் பெட்ரோல் விலை ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வரப்படும்.


பெட்ரோல், டீசல் விலை உயர்வு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று கேட்கிறார்கள். தேர்தலுக்குள் பெட்ரோல், டீசல் விலை குறையும் என நம்புகிறோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும். விரைவில் கச்சா எண்ணை விலை குறையும் பொழுது பெட்ரோல், டீசல் விலையும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார். #PetrolPriceHike #BJP #LaGanesan
Tags:    

Similar News