செய்திகள்

பெரியபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை

Published On 2018-09-12 09:56 GMT   |   Update On 2018-09-12 09:56 GMT
பெரியபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை:

கீழக்கரை தாலுகா பெரியபட்டினத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். முத்துப்பேட்டை, வண்ணாங்குண்டு, சேதுநகர், களிமண்குண்டு, புதுக்குடியிருப்பு, உள்பட 20-க்கும் அதிகமான சுற்றுவட்டார கிராம மக்கள் சிகிச்சை பெறுவதற்கு பெரியபட்டணம் வந்து செல்கின்றனர்.

இங்கு 3 டாக்டர்கள் பணிபுரிந்த இடத்தில் ஒரு பெண் டாக்டர் மற்றும் 4 நர்சுகள் மட்டுமே உள்ளனர். இரவில் அவசர சிகிச்சை, பிரசவத்திற்காக வரும் பெண்கள் டாக்டர் பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் 24 கி.மீ., தொலைவில் உள்ள ராமநாதபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி பைரோஸ்கான் கூறுகையில், கிராம மக்களின் அவசியத்தை உணர்ந்து பெரியபட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News