செய்திகள்

இதை சிறுபிள்ளைகள் கூட அறிவார்கள் - மத்திய அரசு மீது ப.சிதம்பரம் சாடல்

Published On 2018-09-10 10:00 GMT   |   Update On 2018-09-10 10:00 GMT
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #PChidambaram #PetrolDieselPrice
சென்னை:

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனமாக உள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த பதிவுகள் வருமாறு:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள்.

பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது? கச்சா எண்ணெய் விலை 107 டாலர்களாக இருந்தபோது விலை குறைவு. இப்பொழுது கச்சா எண்ணெய் விலை 78 டாலர்களாக இருக்கும் போது விலை உயர்வு ஏன்?

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார். #PChidambaram #PetrolDieselPrice
Tags:    

Similar News