செய்திகள்

ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை - நாராயணசாமி

Published On 2018-09-09 04:48 GMT   |   Update On 2018-09-09 04:48 GMT
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.#RajivGandhi
புதுச்சேரி:

சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான்.

பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டு இருப்பதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாட்டு மக்கள் பா.ஜனதாவுக்கும், நரேந்திர மோடிக்கும் நல்ல பாடத்தை தருவார்கள். கண்டிப்பாக மாற்றம் வரும்.

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடைப்பெற உள்ளது. இந்த போராட்டம் வெற்றிகரமாக அமையும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

அவரிடம், மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேருடைய விடுதலைக்கான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எப்படி பார்க்கின்றீர்கள்? என்ற கேள்விக்கு “காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை? ஆனால், அதிக நாட்கள் குற்றவாளிகள் சிறையில் இருந்ததால் தமிழக அரசு அதுகுறித்து பரிசீலனை செய்வதில் தவறு இல்லை” என்று கூறினார். #RajivGandhi
Tags:    

Similar News