செய்திகள்

கேரளாவில் 200 பவுன், ரூ.10 லட்சம் கொள்ளையடித்த வாலிபர் கைது

Published On 2018-09-04 11:55 GMT   |   Update On 2018-09-04 11:55 GMT
கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவோணம்:

தஞ்சையை அடுத்த காரியா விடுதி நடுத்தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மகன் லபக் என்கிற ஆனந்தராஜ். இவர் மீது தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளை வழக்கில் கேரள போலீசார் திருவோணத்தில் முகாமிட்டு ஆனந்தராஜை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஊரணிபுரத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரிடம் மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதை சுதாரித்து கொண்ட பாண்டியன் ஆனந்தராஜை பிடித்து திருவோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஆனந்தராஜை பிடித்து திருவோணம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சென்னை வில்லிவாக்கம் முகவரியில் ஆதார் கார்டு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் பெங்களூர், கேரளா போன்ற வெளி மாநிலங்களிலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆனந்தராஜை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News