செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சி- பொன் ராதாகிருஷ்ணன்

Published On 2018-08-31 11:35 GMT   |   Update On 2018-08-31 11:35 GMT
பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருவதாக மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் கூறினார். #ponradhakrishnan #gst

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் பா.ஜ.க. இல்ல நிர்வாகி திருமண விழாவில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. யாரையும் மிரட்டவில்லை. தாழ்வு மனப்பான்மை காரணமாக எதிர்கட்சிகள் மிரண்டு போய் உள்ளன. மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.

சென்னையில் நேற்று நடந்த மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டம் ஐ.மு.கூ. கட்சிகளின் கூட்டம் போல் இருந்தது. ஒரு இரங்கல் கூட்டம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கு வாஜ்பாய்க்கு நாங்கள் நடத்திய கூட்டமே உதாரணம். இரங்கல் கூட்டத்தில் தேவையில்லாமல் அரசியல் பேசுவது அநாகரீகமானது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் மீட்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் அது உண்மையாகும் என்ற நினைப்பில் ராகுல்காந்தி தவறான தகவலை பரப்பி வருகிறார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது எண்ணை நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலும் இது போல பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். ஆனால் இதற்கு தமிழக அரசு தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #gst

Tags:    

Similar News