செய்திகள்

காரிமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

Published On 2018-08-29 16:22 GMT   |   Update On 2018-08-29 16:22 GMT
காரிமங்கலம் அருகே கிணற்றின் பக்கவாட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலியானார்.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் காளப்பனஅள்ளி ஊராட்சி காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் ரவி (வயது 43). விவசாயி. இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும், பிரகாஷ்ராஜ் என்ற மகனும் உள்ளனர். ரவிக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் ரவி தனது கிணற்றின் பக்கவாட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

கிணற்றுக்குள் இருந்த மண்திட்டில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மண் திட்டு சரிந்ததில் கிணற்றில் தவறி விழுந்தார். இதை அறிந்ததும் கிணற்றின் மேற்பரப்பில் பணியில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கு திரண்ட பணியாளர்கள் ரவியை மீட்டனர். அப்போது ரவி இறந்து விட்டது தெரியவந்தது. இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
Tags:    

Similar News