செய்திகள்

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- திராவிடர் விடுதலைக் கட்சியினர் வலியுறுத்தல்

Published On 2018-08-27 16:43 GMT   |   Update On 2018-08-27 16:43 GMT
தர்மபுரியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை நடைபெற்றது. இதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இண்டூர்:

தருமபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் வேணு கோபால் தலைமை வகித்தார். 

இந்நிகழ்ச்சியில் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வடநாட்டுக்காரர்களுக்கு பணி வழங்க கூடாது. தமிழகத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்க வேண்டும். தமிழில் தேர்வுகளை நடத்த வேண்டும். தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பிரசார பரப்புரையில் வலியுறுத்தப்பட்டது. பிரசார பயணக்குழுவில் மேற்கண்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஈஸ்வரன் தலைமையில் இசை கச்சேரி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சந்தோஷ், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியதலைவர் சிவக்குமார், பரத்சரவணன், விக்னேஷ், சிவா, சந்தோஷ், சதீஸ், பாடகி ரத்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பிரசார பரப்புரை பயணம் தருமபுரி நகரத்தில் தொடங்கி ஒடசல்பட்டி , கடத்தூர், பொம்மிடி ஆகிய பகுதிகளில் பரப்புரை செய்யப்பட்டு முடிவில் பாப்பிரெட்டிப்பட்டியில் நிறைவுபெற்றது.
Tags:    

Similar News