செய்திகள்

நாமக்கல் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்

Published On 2018-08-20 16:32 GMT   |   Update On 2018-08-20 16:32 GMT
நாமக்கல் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டிய டிரைவரை தேடி வருகின்றனர்.
மோகனூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பாலப்பட்டி பகுதியில் கொமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலர் தவமணி, கிராம உதவியாளர்களுடன் அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தினார். உடனே லாரியில் இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். லாரியை பரிசோதித்த போது அதில் மணல் ஏற்றப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

அனுமதியின்றி மணல் கடத்தப்பட்ட போது வழிமறித்ததால் டிரைவர் தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தவமணி கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். அந்த லாரியை ஓட்டி வந்த ஓமலூர் அருகே உள்ள தும்பிபாடி கே.கே.பள்ளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள். 
Tags:    

Similar News