செய்திகள்

போலீஸ்காவலில் வாலிபர் பலி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2018-08-08 09:55 GMT   |   Update On 2018-08-08 09:55 GMT
திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லபட்ட வாலிபர், போலீஸ் காவலில் பலியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது.
முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தெருவில் வசிக்கும் மாசிலாமணி மகன் மணிகண்டன் (வயது 27).

இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு மணிகண்டன் பலியானதாக கூறப்படுகிறது.

திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லபட்ட வாலிபர், போலீஸ் காவலில் பலியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காசிநாத்துரை, தாலுகா செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறுகையில், ‘‘ திருட்டு வழக்கில் போலீஸ் விசாரனைக்காக அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் இறப்பில் சந்தேகம் இருப்பதால், இறப்பு குறித்து நீதி விசாரணையும், பலியான மணிகண்டன் குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்க வேண்டும்.அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’’, என்றார். #tamilnews
Tags:    

Similar News