செய்திகள்

குளிர்சாதன பெட்டி வாங்கி ரூ.37 லட்சம் மோசடி - பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2018-07-25 09:31 GMT   |   Update On 2018-07-25 09:31 GMT
குளிர்சாதன பெட்டி வாங்கி ரூ.37 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

போரூர்:

நெசப்பாக்கம் கிழக்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார். இவர் நூகன் ஏர்கான்ஸ் என்கிற பெயரில் குளிர் சாதனப் பெட்டி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடம் கிண்டி எம்.கே.என் சாலையில் ஸ்கை லக்சரி இண்டியா சர்வீசஸ் என்கிற பெயரில் அலுவலகம் நடத்தி வந்த சக்தி முருகன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் குளிர்சாதனப் பெட்டி வாங்கி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் மொத்தம் 107 குளிர்சாதனப் பெட்டிகளை பிரசாந்த் குமார் நிறுவனத்தில் இருந்து சக்தி முருகன் வாங்கினார்.

இதன் மதிப்பு சுமார் ரூ.37லட்சம். பிரசாந்த் குமாருக்கு தொடர்ந்து பணம் தராமல் ஏமாற்றி வந்தார்.

இந்த நிலையில் திடீரென தலைமறைவானார். இது குறித்து பிரசாந்த் குமார் கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார்.

அசோக் நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெய ராஜ் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதையடுத்து சக்தி முருகனின் மனைவி பூர்ணிமா மற்றும் சக்தி முருகனின் சகோதரர் ஹரிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சக்திமுருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #arrestcase

Tags:    

Similar News