செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே வேலை வாங்கி தருவதாக 2 பேரிடம் ரூ.9 லட்சம் மோசடி

Published On 2018-07-14 10:10 GMT   |   Update On 2018-07-14 10:10 GMT
ஆண்டிப்பட்டியில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கொண்டம நாயக்கன்பட்டி யை சேர்ந்த பாண்டி மகன் வைரம் (வயது32). இவருக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக அதே பகுதியை சேர்ந்த கஜேந்திரன், அவரது மனைவி உமா, தந்தை முத்துராகவன், தாய் ராணி, உறவினர் மலர் ஆகியோர் கூறி உள்ளனர்.

இதற்கு ரூ.7 லட்சம் பணத்தை வைரம் கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது அவரை மிரட்டி அனுப்பி உள்ளனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் வைரம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின்பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் மோசடியில் ஈடுபட்ட கஜேந்திரன் மற்றும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள பிச்சம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரகுமார். இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக பிரியா, ஆண்டாள், சரவணன், பிரபாகரன் ஆகியோர் கூறி உள்ளனர். இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.1,60,000 பணத்தை வீரகுமார் அவர்களிடம் கொடுத்தார்.

ஆனால் வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News