செய்திகள்
அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்தின் கண்ணாடி உடைந்து சிதறிக்கிடப்பதை படத்தில் காணலாம்.

விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்தின் கண்ணாடி உடைப்பு

Published On 2018-07-10 11:04 GMT   |   Update On 2018-07-10 11:04 GMT
விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அமைச்சர் சி.வி.சண்முகம். இவரது அலுவலகம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பகுதியில் உள்ளது. இதன் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்கு 24 மணிநேரமும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும்.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் அவரது தனி உதவியாளர் தரணிதரன் தினமும் வந்து பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பெற்று அதனை அமைச்சரிடம் வழங்கி வருவார்.

நேற்று இரவு அமைச்சர் அலுவலகத்தில் வலதுபுறத்தில் உள்ள கண்ணாடி மீது யாரோ? மர்ம மனிதர்கள் கல்வீசி சென்றுள்ளனர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கி சிதறியது. இன்று காலை அமைச்சரின் தனி உதவியாளர் தரணிதரன் அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது கண்ணாடி உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அமைச்சர் அலுவலகத்தில் உள்ள கண்ணாடியை உடைத்தவர்கள் யார்? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News