செய்திகள்

சுவாமிமலை அருகே நாய்கள் துரத்தி வந்த 5 வயது புள்ளிமான் மீட்பு

Published On 2018-06-18 16:51 GMT   |   Update On 2018-06-18 16:51 GMT
சுவாமிமலை அருகே விவசாயி கரும்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்க்க சென்ற போது நாய்கள் துரத்தி வந்த 5 வயது புள்ளிமானை பொதுமக்கள் உதவியுடன் மீட்டார்.

சுவாமிமலை:

சுவாமிமலை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மேலாத்துகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவர் இன்று காலை தனது கரும்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது ஒரு புள்ளிமானை நாய்கள் துரத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக நாய்களை விரட்டி விட்டு அப்பகுதி மக்கள் உதவியுடன் மானை மீட்டு அங்குள்ள மாரியம்மன் கோவில் வாசலில் கட்டி வைத்தார். பின்னர் அவர் இதுபற்றி சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த இன்ஸ் பெக்டர் ரேகாராணி மானை பார்வையிட்டார். அவர் வனத்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த வனக்காவலர்கள் மானை மீட்டு கும்பகோணம் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், இந்த மான் கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து வழி தவறி வந்திருக்கலாம். இது 5 வயது உடைய ஆண் மான் ஆகும். சிகிச்சைக்கு பின் இந்த மானை நாங்கள் வேதாரண்யம் வனத்துறையிடம் ஒப்படைப்போம். அவர்கள் அதனை அப்பகுதி வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவர் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News