search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புள்ளிமான் மீட்பு"

    • மானின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தனர்.
    • கிணற்றில் தவித்த புள்ளிமானை கயிறு கட்டி உயிருடன் மீட்டு பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவருடைய 60 அடி ஆழ கிணற்றில் நேற்று முன்தினம் இரவு 3 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது.

    அப்போது கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால் மான் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. நேற்று காலை மானின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தனர்.

    பின்னர் இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் தவித்த புள்ளிமானை கயிறு கட்டி உயிருடன் மீட்டு பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    வனத்துறை அதிகாரிகள் புள்ளி மானை பிக்கிலி வனப்பகுதியில் உள்ள பனைக்குளம் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

    • தீய ணைப்பு வீரர்கள் மீட்டனர்
    • காப்புக் காட்டில் விட்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த கேசவன்குப்பம் கிராமத்தில் 30 அடி ஆழ விவசாயக்கிணற்றில் புள்ளிமான் விழுந்து கிடந்தது.

    இது குறித்து வனச் சரகர் துரைமுருகன் சோளிங்கர் தீயணைப்பு நிலையத் துக்கு தகவல் அளித்தார்.

    அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சிவகுமார் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் சம்மந்தப் பட்ட இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 30 அடி ஆழ முள்ள கிணற்றில் இருந்து அரை மணிநேரம் போராட் டத்திற்கு பிறகு 2 வயது மதிக் கத்தக்க ஆண் புள்ளிமானை உயிருடன் மீட்டனர்.

    பின்னர் அந்த புள்ளிமானை வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் விட்டனர்.

    ×