என் மலர்
நீங்கள் தேடியது "Spotted Deer Rescue"
- தீய ணைப்பு வீரர்கள் மீட்டனர்
- காப்புக் காட்டில் விட்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த கேசவன்குப்பம் கிராமத்தில் 30 அடி ஆழ விவசாயக்கிணற்றில் புள்ளிமான் விழுந்து கிடந்தது.
இது குறித்து வனச் சரகர் துரைமுருகன் சோளிங்கர் தீயணைப்பு நிலையத் துக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சிவகுமார் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் சம்மந்தப் பட்ட இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 30 அடி ஆழ முள்ள கிணற்றில் இருந்து அரை மணிநேரம் போராட் டத்திற்கு பிறகு 2 வயது மதிக் கத்தக்க ஆண் புள்ளிமானை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அந்த புள்ளிமானை வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் விட்டனர்.
- பள்ளி வளாகத்தில் புகுந்த புள்ளி மான் மீட்கப்பட்டது.
- மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நகரப் பகுதியில் மான் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மதுரை
மதுரை அவனியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் வந்த 4 வயதுடைய புள்ளி மான் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு பயந்து அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் புகுந்தது. அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற மான், தடுப்பு சுவரில் மோதி காயத்துடன் மயங்கி விழுந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அவனியாபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் வரும் வரை மான்களின் கால்கள் கட்டப்பட்டு தனியார் நிறுவனத்தில் போலீசார் பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.
தொடர்ந்து வனத்துறையினர் மானை மீட்டு முதலுதவி அளித்து வாகனத்தில் எடுத்து சென்றனர். இதுபோன்று மான்கள் காடுகள் நிறைந்த பகுதியில் தான் இருக்கும். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நகரப் பகுதியில் மான் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.






