செய்திகள்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-06-13 16:52 GMT   |   Update On 2018-06-13 16:52 GMT
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள் வெங்கடேசன், செல்வராசு, ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் மாநில செயலாளர் சவுந்தரராசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், சீருடை, பணிப் பதிவேடு, சம்பள ரசீது போன்றவை வழங்கிட வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சைக்கு ஈட்டுறுதி திட்டத்தில் இணைத்திட வேண்டும். ஓய்வு பெறும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு பண முடிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News