செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்து விஜயகாந்த் தலைமையில் போராட்டம்

Published On 2018-05-28 07:22 GMT   |   Update On 2018-05-28 07:22 GMT
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.#ThoothukudiFiring #VijayakanthProtest
சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பறிபோனதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் மே 28-ம் தேதி தே.மு.தி.க. சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன், கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் போராட்டம் நடத்து. அப்போது, போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் என விஜயகாந்த் தெரிவித்தார். #ThoothukudiFiring #VijayakanthProtest
Tags:    

Similar News